தஞ்சை மாரியம்மன்கோவில் பகுதியில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் தலைமையில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது கோமுட்டி செட்டி தெரு பகுதியில் ஒரு வீட்டின் பின்புறம் சந்தேகப்படும்படி நின்றிருந்த ஒரு பெண் உள்பட 4 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
அதில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த ஆசைத்தம்பி மனைவி ஜெயலட்சுமி (38), சோமுசெட்டி தெரு ஆதி (37), கத்தரி நத்தம் தெற்கு தெரு பால்பாண்டி (31), அருள் மொழி பேட்டை வளையல்கார தெரு வெங்கடேஷ் (25) என்பதும், திருட்டுத்தனமாக கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயலட்சுமி, ஆதி, பால்பாண்டி, வெங்கடேஷ் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ஆறரை கிலோ கிலோ கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்