தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா அம்மாபேட்டை அருகே புத்தூர் அருள்மிகு அழகிய நாயகி (எ) செளந்திர நாயகி சமேத புற்றிடங்கொண்டீஸ்வரர் ஆலயத்தின் எதிரில் உள்ள கல்யாண சுந்தர விநாயகர் சன்னதியில் அரசு வேம்பு திருக்கல்யாணம் நடந்தது. காலை விக்னேஸ்வர பூஜை,
எஜமான சங்கல்பம், கணபதி ஹோமம் பார்வதி பரமேஸ்வர ஹோமம் உட்பட நடந்தது. ஆலயத்திலிருந்து திருமணத்திற்கான சீர்வரிசை பொருட்கள் அடங்கிய தட்டினை ஏராளமான பெண்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். அரசு – சிவன், வேம்பு – பார்வதி திருக்கல்யாணம் நடந்தது. இதில் திருவடிக் குடில் சுவாமிகள் பங்கேற்று உரை நிகழ்த்தினார். இதில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.