Skip to content

தஞ்சையில் 3 நாட்கள் கால்நடை வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி…..

தஞ்சாவூா் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மையத்தில் வரும் 7, 14, 21ம் தேதிகளில் கால்நடை வளா்ப்பு குறித்த இலவச பயிற்சிகள் நடக்க உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தஞ்சாவூா் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மையத் தலைவா் கே. ஜெகதீசன் தெரிவித்துள்ளதாவது…  தஞ்சாவூா் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகில் இயங்கி வரும் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வெள்ளாடு

வளா்ப்பு குறித்து வரும் 7ம் தேதியும், நாட்டுக்கோழி வளா்ப்பு குறித்து 14ம் தேதியும், கறவை மாடு வளா்ப்பு குறித்து 21ம் தேதியும் காலை 10 மணி முதல் இலவசப் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. பயிற்சியில் விருப்பமுள்ள விவசாயிகள் ஆதாா் நகலுடன் கலந்து கொள்ளலாம். முன்பதிவு அவசியமில்லை. மேலும் விவரங்களுக்கு 04362 – 264665 என்ற எண்ணில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிக்குள் தொடா்பு கொள்ளலாம் என்று இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!