பாபநாசம் ரோட்டரிச் சங்கம் மற்றும் தஞ்சை மாவட்ட சதுரங்க கழகம் இணைந்து பத்தாம் ஆண்டு சிவஞான முதலியார் நினைவு மாநில அளவிலான சதுரங்கப் போட்டியை நடத்தின. பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் ஆர். எஸ். மஹாலில் நடந்த போட்டிக்கு பாபநாசம் ரோட்டரி சங்கத் தலைவர் அறிவழகன் தலைமை வகித்தார். தஞ்சை மாவட்ட சதுரங்க கழக துணைத் தலைவர் செந்தில்குமரன் பழனிவேல், இணை செயலர் பண்டாரவாடை நவநீதகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக துணைத் தலைவர் சிவ. இ. சரவணன் வரவேற்றார். சதுரங்கப் போட்டியினை முன்னாள் ரோட்டரி மாவட்ட ஆளுநர் பாலாஜி துவக்கி வைத்தார். போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 300 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் வெற்றி பெற்ற 80 பேர்களுக்கு தஞ்சை மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் முத்துச்செல்வன் கலந்துக் கொண்டு கோப்பை, சான்றிதழ், ரொக்க பரிசினை வழங்கிப் பாராட்டி பேசினார். பாபநாசம் அரசு வழக்கறிஞர் தர்ம. வெற்றிச்செல்வன், கவித்தலம் ஊராட்சி மன்றத் தலைவர் சுமதி குணசேகரன், சதுரங்க கழக துணைத் தலைவர்கள் செந்தில்நாதன், சீனிவாசன், சிவராஜ், ஜாகீர் உசேன், இணைச் செயலர் சிவக்குமார், பொருளாளர் வினோத், செயலர் சந்தோஷ், திருச்சி மாவட்டச் செயலர் தினகரன், நாகை மாவட்டச் செயலர் சுந்தர்ராஜ், புதுக்கோட்டை மாவட்டச் செயலர் கணேசன், மயிலாடுதுறை மாவட்டச் செயலர் வெற்றி வேந்தன் உட்பட பாராட்டி பேசினர். போட்டியில் சதுரங்க வீரர்கள், நடுவர்கள், பயிற்சியாளர்கள், பெற்றோர்கள், மாவட்ட தாலுக்கா பொறுப்பாளர்கள், ம பொதுமக்கள் உட்பட கலந்துக் கொண்டனர். தஞ்சை மாவட்ட சதுரங்க கழக செயலர் தரும. சிலம்பரசன் நன்றி கூறினார்.