தஞ்சாவூர் தாசில்தார் சக்திவேல் கூறியிருப்பதாவது:- தஞ்சை தாலுகாவில் பசலி 1432-க்கான வருவாய் தீர்வாய (ஜமாபந்தி) கணக்குகள் தணிக்கையானது கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா தலைமையில் நடைபெறுகிறது. இந்த ஜமாபந்தி நிகழ்ச்சி இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. தொடக்க நாள் அன்று பெரம்பூர் சரகத்திற்கும், வருகிற 16-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வல்லம் சரகத்திற்கும், 17-ந்தேதி (புதன்கிழமை) தஞ்சை சரகத்திற்கும், 18-ந்தேதி (வியாழக்கிழமை) ராமாபுரம் சரகத்திற்கும், 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நாஞ்சிக்கோட்டை சரகத்திற்கும் நடைபெறுகிறது.
மொத்தம் 5 நாட்கள் நடைபெறும். இந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் தஞ்சை வட்டத்திற்குட்பட்ட பொதுமக்கள் அனைவரும் வருவாய் தீர்பாய நாட்களில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை வருவாய் தீர்வாய அலுவலரிடம் கொடுத்து தீர்வு காணலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.