தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, கும்பகோணம்- தஞ்சாவூர் மெயின் சாலையில் பாபநாசம் அடுத்த இராஜகிரி ஹனபி பெரிய பள்ளி வாசலில் ஹபீபி நண்பர்கள் குழு சார்பில் ரமலானை முன்னிட்டு இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி
நடைப் பெற்றது. பெரிய பள்ளித் தலைவர் யூசுப் அலி வரவேற்றார். பெரிய பள்ளி இமாம் முகம்மது இஸ்மாயில் ரமலான் சிறப்பு பற்றி பேசினார். இதில் பெரிய பள்ளி முத்தவல்லி ரவூப், துணைச் செயலாளர் சபீர் அகமது, அன்னை கதீஜா ரலி கல்வி மையம் தலைவர் முகம்மது பாரூக் , பெரிய பள்ளி செயலாளர் முகம்மது சுல்தான், முஸ்லிம் வெல்பேர் அசோசியேஷன் தலைவர் முகம்மது காசிம், பெரிய பள்ளி உறுப்பினர்கள் முகம்மது ரபீக், அப்துல் ஹமீது, அப்துல் மாலிக் உட்பட பல நூறு பேர் பங்கேற்றனர். பொருளாளர் பாரூக் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாட்டினை ஜம்பதிற்கும் மேற்ப் பட்ட ஹபீபி நண்பர்கள் செய்திருந்தனர்.