சுதந்திரப் போராட்ட வீரர் தேசிய தலைவர் முத்துராமலிங்க தேவர் 116ம் ஆண்டு ஜெயந்தி விழா மற்றும் 61-வது குருபூஜை விழா நடைபெற்றது. இதை ஒட்டி தஞ்சை விளார் சாலை பர்மா காலனி பகுதியில் உள்ள தேவர் சிலைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மா.லெ) சார்பில் மாநகர ஒன்றிய செயலாளர் எஸ்.எம். ராஜேந்திரன் தலைமையில் மாவட்ட ஏ.ஐ.சி.சி.டி.யூ துணைச் செயலாளர் அருணாச்சலம் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னதாக தேவர் சிலைக்கு குருபூஜை நடத்தி மரியாதை செய்யப்பட்டது. தேவர் குருபூஜை விழாவில் பசும்பொன் தேவர் பேரவை மாவட்ட பொருளாளர் முனுசாமி, துணைத் தலைவர் தர்மராஜ், தியாகி மாணிக்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மா.லெ) மாவட்ட குழு சூரி. ரவிச்சந்திரன், ராஜரத்தினம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். சிலை நிறுவனர் மதிவாணன் நன்றி கூறினார்.
