தஞ்சை அருகே மாரியம்மன் கோவில் மகேஸ்வரி நகரை சேர்ந்தவர் தேவேந்திரன். இவரது மனைவி கோமளவல்லி (48). இவர் கடந்த 9ம் தேதி காலையில் தனது குழந்தையின் கல்வி கட்டணத்தை செலுத்த வீட்டைப் பூட்டிக் கொண்டு பள்ளிக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடன் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 13 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
உடன் இதுகுறித்த கோமளவல்லி தஞ்சை தாலுக்கா போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து தாலுக்கா சப்- இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.