தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் லிமிடெட் உட்பட்ட தஞ்சாவூர் கரந்தை புறநகர் கிளை மற்றும் ஜெபமாலைபுரம் போக்குவரத்து பணிமனை ஆகிய இடங்களில் அரசு பஸ் டிரைவர் கண்டக்டர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வறை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குனர் ராஜ்மோகன் தலைமை தாங்கினார். இந்த குளிரூட்டப்பட்ட ஓய்வறையை டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் , துணை மேயர் அஞ்சுகம் பூபதி, கும்பகோணம் கோட்ட பொது மேலாளர் இளங்கோவன் , பொது மேலாளர் ( தொழில்நுட்பம் ) முகமது நாசர், துணை மேலாளர்கள் தமிழ்ச்செல்வன், செந்தில்குமார், ராஜேந்திரன், தஞ்சை கோட்ட மேலாளர் பாலமுருகன், கிளை மேலாளர் சந்தனராஜ் சுசியன், பிரகாஷ், அஜய் வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.