தஞ்சை கலைஞர் அறிவாலயத்தில் மத்திய மாவட்ட மாநகர மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
தலைமை கழக அறிவிப்பை ஏற்று நடந்த இக்கூட்டத்திற்கு மத்திய மாவட்ட செயலாளரும் திருவையாறு எம்எல்ஏவும் ஆன துரை சந்திரசேகரன் தலைமை வகித்தார் தஞ்சை மாநகர செயலாளரும், மாநகராட்சி மேயருமான சன் ராமநாதன் முன்னிலை வைத்தார். மாநில மகளிர் அணி ஆலோசனை குழு உறுப்பினர் காரல் மார்ச் முன்னிலை வைத்தார்.
கூட்டத்தில் மகளிர் அணி மாநில செயலாளர் ஹெலன் டேவிட்சன், மண்டல பொறுப்பாளர் ரேகா பிரியதர்ஷினி, மாவட்ட பொறுப்பாளர் ரத்னா லோகேஸ்வர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு தீர்மானங்கள் குறித்து விளக்கிப் பேசினர்.
கூட்டத்தில் புதிய பெண் உறுப்பினர்கள் 50 ஆயிரம் பேரை மாவட்டம் தோறும் ஒரு மாதத்திற்குள் சேர்க்க வேண்டும். தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய அனைத்து மகளிர் அணியினருக்கும் பாராட்டுக்கள் தெரிவிப்பது கழக முப்பெரும் விழாவை சிறப்பாக கொண்டாடுவது பவள விழாவையொட்டி மகளிர் அணியினர் அனைவரது வீட்டிலும் கட்சி கொடியை ஏற்ற வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆலோசனைக் கூட்டத்தில் மாநில மருத்துவர் அணி துணை செயலாளர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ரமணி சுப்பிரமணியன், தொண்டர் அணி மாவட்ட அமைப்பாளர் கமலா ரவி, மாநகர அமைப்பாளர் ரம்யா சரவணன், மாநகரத் தொண்டர் அணி அமைப்பாளர் தமிழருவி ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.