தஞ்சை மாவட்டம், சுவாமிமலை அருகே மருத்துவக்குடி மேல தெருவை சேர்ந்தவர் நடேசன் மகன் ரவி (50), இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அங்கு உள்ள பலவாற்றில் மீன்பிடிக்க சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பவில்லையாம். அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடியும் ரவி கிடைக்கவில்லை. இதுகுறித்து சுவாமிமலை போலீசில் புகார் செய்யப்பட்டது.
இந்நிலையில் சுவாமிமலை அருகே உள்ள இன்னம்பூர் கிராமத்தில் பலவாற்றில் ரவி உடல் மிதந்து வந்துள்ளது. மீன்பிடிக்கும் போது தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவ செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரவியின் உடலை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்கு கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.