தஞ்சை மாவட்டம், கும்பகோணம் பகுதியை ரமணி மகன் சத்தியமூர்த்தி (56). சிவில் இன்ஜினியர். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இன்ஸ்ட்கிராம் பயன்படுத்தி வந்தார். அதில் ஒரு லிங்க் வந்துள்ளது. குறிப்பிட்ட தொகை செலுத்தினால் அதிக லாபம் பெறலாம் என விளம்பரப்படுத்தப்பட்டு இருந்தது.
அந்த லிங்கை கிளிக் செய்து பார்த்தபோது அது மற்றொரு சமூக வலைத்தளமான டெலிகிராமிற்கு உள்ள குரூப்பிற்கு சென்றது. அந்த குரூப்பில் இணைந்துள்ளார். அதில் இருந்த போலியான நபர்கள் இதன் மூலம் ஆன்லைன் பகுதி நேர வேலைகள் உள்ளது. இதில் உள்ள டாஸ்க் மூலம் அதிக லாபம் பெற்றதாக இன்ஜினியரிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
இதனை உண்மை என நம்பிய அவர் தானும் டாஸ்கை செய்ய தொடங்கினார். அந்த டாஸ்க் பிரபலமான புகைப்படங்களுக்கு மதிப்பாய்வு செய்தல் மற்றும் படங்களில் உள்ள பிழைகளை திருத்தி அமைத்தல் போன்ற முறைகளில் பணத்தை முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம் என நிர்ணயிக்கப்பட்டு இருந்துள்ளது.
முதலில் ரூ. 22,000 அனுப்பிய நிலையில் அவருக்கு ரூபாய் 5 ஆயிரத்து 500 கிடைத்தது. பின்னர் ரூ.1 லட்சத்து ஐம்பதாயிரம் இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் என பல்வேறு தவணைகளாக ரூ. 12 லட்சத்து 65 ஆயிரத்து 656 ஆன்லைன் மூலம் செலுத்தியுள்ளார். ஆனால் அவருக்கு எந்த லாப தொகையும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவர் தஞ்சை மாவட்ட சைபர் கிரைம் போலீசில்புகார் கொடுத்தார்.
அதன் பெயரில் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.