தஞ்சை மாவட்டம்,பாபநாசம் பட்டுக்கோட்டை அழகிரி மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. பாபநாசம் பட்டுக் கோட்டை அழகிரி மேல் நிலைப் பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியினை பாபநாசம் வட்டாட்சியர் பூங்கொடி திறந்து வைத்தார். கண் காட்சியை பள்ளி தலைமைச் செயலர் திருஞானசம்பந்தம் நிர்வாகச் செயலர் வரதராஜன், பள்ளிச் செயலர் செல்வராசு, அறங்காவலர்கள் கைலாசம், இளவரசி பொம்மி, பள்ளி தலைமையாசிரியர் தீபக் உட்பட பெற்றோர்கள் பார்வையிட்டனர். 1ம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரையான மாணவர்கள் தங்கள் அறிவியல் திறனை வெளிப் படுத்தும் வகையில் நவீன குப்பைத் தொட்டி, மீனின் கழிவை உரமாக்குவது, பேக்டரி புகையை பில்டர் செய்வது, செங்கற்களை மிஷின் மூலம் தயாரிப்பது உட்பட 200 க்கும் மேற்பட்ட தங்களது படைப்பினை காட்சிப் படுத்தியிருந்தனர்.