தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் ச. முரசொலியை ஆதரித்து தஞ்சை மத்திய மாவட்ட தி. மு. க. செயலாளரும், திருவையாறு சட்டப்பேரவை உறுப்பினர் துரை. சந்திரசேகரன் தலைமையில் பூதலூர் பகுதியில் பிரச்சாரம் நடந்தது. காலை 8 மணிக்கு பூதலூர் ஒன்றியம் மேல திருவிழாப்பட்டியில் தஞ்சை மத்திய மாவட்ட தி. மு. க. செயலாளரும், திருவையாறு சட்டப்பேரவை உறுப்பினர் துரை. சந்திரசேகரன் தலைமையில் பிரச்சாரம் துவங்கி பூதலூர் ஒன்றியம் முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பு நடைப்பெற்று வருகிறது.
