தஞ்சை மாவட்டம், பாபநாசம் பேரூராட்சியில் 9-வது வார்டு காணியாளர் மேல தெரு , வாதலை தோப்பு, கபிஸ்தலம் ரோடு, மேலரஸ்தா ஆகிய பகுதிகளில் பேரூராட்சி கவுன்சிலர் பாலகிருஷ்ணன் முன்னிலையில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. அது சமயம் பாபநாசம் பேரூராட்சி டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் பொது மக்களிடம் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள். பொதுமக்கள் வீட்டில் ஏடிஸ் கொசு உருவாகும் தேவையற்ற பொருட்களான பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் கப்புகள், தேங்காய் ஓடுகள், உடைந்த வாலி, டயர்கள் ஆகியவற்றை அகற்றி உதவ வேண்டும். தண்ணீர் சேமித்து வைக்கும் தொட்டிகளை வாரம் ஒரு முறை ப்ளீச்சிங் பவுடரை கொண்டு நன்றாக தேய்த்து கழுவி கொசு புகாதவாறு மூடி வைக்க வேண்டும். பகல் நேரத்திலும் சிறு குழந்தைகளை கொசு வலைக்குள் தூங்க வைக்க வேண்டுமென விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.