தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளி, மாகாளிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி – கிழக்கு உள்ளிட்டவற்றில் பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா நேரில் சென்று மாணவர்களிடம் கல்வித் திறனை அறிய அவர்களிடையே கேள்வி கேட்டார். ஆசிரியர்கள் பள்ளிக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர எம்.எல்.ஏ விடம் கோரிக்கை விடுத்தனர். அதைத் தொடர்ந்து,
பழுதடைந்த நிலையில் உள்ள அய்யம்பேட்டை கிளை நூலகத்திற்குச் சென்று பார்வையிட்டார்.
முன்னதாக, எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் பாரதிதாசன் தெருவில் ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையக் கட்டட கட்டுமானப் பணியை பார்வையிட்டார். இதில் அய்யம்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் ராஜசேகர், பேரூராட்சி தலைவி புனிதவதி, அய்யம்பேட்டை பேரூர் திமுக செயலர் வழக்கறிஞர் துளசி அய்யா, பேரூராட்சி துணைத் தலைவர் அழகேசன், மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்புச் செயலர் வழக்கறிஞர் புழல் ஷேக் முஹம்மது அலி, தஞ்சை வடக்கு மாவட்டத் தலைவர் ஹிபாயத்துல்லா, மாவட்டப் பொருளாளர் பொகர்தீன் உட்பட உடனிருந்தனர்.