தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அடுத்த ராஜாமடம் ஊராட்சிக்குட்பட்ட கீழத்தோட்டம் கடற்கரையில் மர்ம பொருள் கிடப்பதாக கடலோர காவல் குழுமத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து பட்டுக்கோட்டை கடலோர காவல் குழும ஆய்வாளர் மஞ்சுலா தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் கடற்கரையோரம் பாலித்தீன் பையில் இருந்த அந்த மர்ம பொருளை வருவாய்த்துறையினர் முன்னிலையில் போலீசார் கைப்பற்றி ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். ஆய்வில் அது மெத்தம்பேட்டமைன் என்கிற போதை பொருள் என்பது தெரியவந்தது. 900கிராம் எடை கொண்ட இதன் மதிப்பீடு சுமார் ரூ.2கோடி இருக்கும் என கருதப்படுகிறது. இதுகுறித்து போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். போதை பொருளை கைப்பற்றும்போது அதிராம்பட்டினம் வருவாய் ஆய்வாளர் ஜெகதீசன், கடலோர காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் பிச்சை வேம்பு, ராஜசேகர், ராஜாமடம் கிராம நிர்வாக அலுவலர் முருகேஸ்வரி ஆகியோர் உடனிருந்தனர்.
அதிராம்பட்டினம் கடற்கரையில் ரூ.2கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்…
- by Authour
