தஞ்சை மாவட்டம், பாபநாசத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு ஒன்றியக் குழு உறுப்பினர் புகழேந்தி தலைமை வகித்தார். இதில் மாவட்டச் செயலர் பாரதி, ஏஐடியூசி மாநிலச் செயலர் தில்லைவனம், விவசாய சங்க மாவட்டச் செயலர் தர்மராஜன், ஒன்றியச் செயலர் சேகர், துணைச் செயலர் கனகராஜ் , ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கவாஸ்கர், சந்திரா, இலங்கேசன், கிளை செயலர்கள் சாட்சிலிங்கம், ஜெகந்நாதன் உட்பட கலந்துக் கொண்டனர். கூட்டத்தில் மத்திய அரசின் மக்கள், தொழிலாளர், விவசாய விரோத, கொள்கைகளுக்கு எதிராக, விலைவாசி உயர்வை கட்டுப் படுத்த செப்டம்பர் 12 ,13 ,14 தேதிகளில் மாநிலம் தழுவிய மறியல் போராட்டத்தில் பாபநாசம் ஒன்றியத்தில் 200 பேர் கலந்து கொள்வது என தீர்மானிக்கப் பட்டது. பாபநாசம் நகரப் பொறுப்பாளர் பாலாஜி நன்றி கூறினார்.