பொது இடங்களில் புகைப்பிடித்தால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளதாவது.. தஞ்சாவூர் மாநகராட்சி பகுதியில் பொது மக்கள் அதிகம் கூடக்கூடிய இடங்களான பேருந்து நிலையம், மருத்துவமனைகள், பேருந்து நிறுத்தங்கள். பூங்காக்கள் மற்றும் அனைத்து பொது இடங்களிலும் சிகரெட், சுருட்டு போன்றவைகள் புகைத்தல் மற்றும் போதை பொருட்கள் பயன்படுத்துதல் மேலும் பள்ளி, கல்லூரிகள் அமைந்துள்ள பகுதியில் இருந்து 100 மீட்டர் தொலைவிற்குள் சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யக்கூடிய கடைகள் அமைத்தல் மற்றும் 18 வயதிற்கு குறைவானவர்களுக்கு சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்தல் போன்றவை சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் பயன்படுத்துதல் தடைச் சட்டம் 2003 (கோட்பா-2003)ன் படி தடை செய்யப்பட்டுள்ளது.
எனவே மேற்படி சட்டத்தை மீறுவோர் மீது பிரிவு 4(அ) (ஆ) மற்றும் 6(இ)ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் பொது இடங்களில் புகை பிடித்தால் ரூபாய். 200/- கள அபராதம் விதிக்கப்படும். மேலும் கடை உரிமம் ரத்து செய்யப்படும் என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.