தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சி பகுதியில் மக்கும் குப்பை மக்காத குப்பை தரம் பிரிப்பது மற்றும் தரம்பிரித்த குப்பைகளை தூய்மைப்பணியாளரிடம் கொடுப்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தூய்மைப்பணியாளர்கள் மாநகர் முழுவதும் தூய்மை பணியை மேற்கொண்டனர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன், மாநகராட்சி ஆணையர் லட்சுமணன், மாநகர் நல அலுவலர் பிரேமா, பொதுசுகாதார குழு தலைவர்
குட்டி.தட்சிணாமூர்த்தி, மண்டல குழு தலைவர் பாபு நரசிம்மன், மாநகர் மன்ற உறுப்பினர்கள் ரூபீன்ஷா அலெக்ஸ், செல்வம், சுகாதார ஆய்வாளர்கள் பாலசுப்ரமணியன், மணிகண்டன், முருகானந்தம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.