ஒன்றிய அரசை கண்டித்து தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் அருகில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்ஒன்றிய அரசை கண்டித்து தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் அருகில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி வங்கிக் கணக்கை முடக்கி ஜனநாயகத்தை சீர்குலைக்காதே, பாஜகவுக்கு பணம் கொடுத்தவர்கள் பட்டியலை வெளியிட வேண்டும் என்பது உட்பட ஒன்றிய அரசை கண்டித்து ோஷங்கள் எழுப்பப்பட்டன.
மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.ஜி. ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட முன்னாள் தலைவர் நாஞ்சி கி. வரதராஜன், பொதுக் குழு உறுப்பினர்கள் ஏ. ஜேம்ஸ், வயலூர் எஸ். ராமநாதன், பொருளாளர் ஆர். பழனியப்பன், துணைத் தலைவர் ஜி. லட்சுமி நாராயணன், சி.கே. சிதம்பரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்..