தஞ்சாவூர் கீழவஸ்தாசாவடி அருகே அவிலா அவன்யூ நகரை சேர்ந்தவர் இந்திராணி (வயது 50). இவரது கணவர் உயிரிழந்த நிலையில், தனது மகள்கள் சுஷ்மிதா (27), ஸ்ருதி (25) ஆகியோருடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் ஞாயிற்றுக் கிழமை கார்த்திகை தீப திருநாள் என்பதால் வீட்டின் வெளியே விளக்கு ஏற்றிக்கொண்டு இருந்துள்ளார் இந்திராணி.
அப்போது வீட்டின் பின்பக்கம் உள்ள கம்பி வேலியைப் பிரித்துக் கொண்டு மங்கி குல்லா முகமூடி உடன் வேட்டி அணிந்த மூன்று மர்ம நபர்கள் வருவதை பார்த்த இந்திராணியும் அவரது மகள்களும் “திருடன்… திருடன்…” என கத்தி கூச்சலிட்டனர். இதையடுத்து அந்த மர்ம நபர்கள் கத்தி, கட்டையை காண்பித்து, “சத்தம் போட்டால் கொலை செய்து விடுவோம்” எனக் கூறி அந்தப் பெண்களை மிரட்டி இருக்கிறார்கள்.
அப்போது அங்கிருந்த மூதாட்டி அந்தக் கொள்ளையனை பிடித்து வெளியே தள்ளி கதவை பூட்டி உள்ளார். இதனால் அவர்களது நகைகள் தப்பிவிட்டன. இதனையடுத்து அங்கிருந்து வெளியே வந்த அந்தக் கொள்ளையன் கைரேகை தடம் இருக்கக்கூடாது என்று தனது மங்கி குல்லா முகமூடியை அவிழ்த்து கதவில் இருந்த கைரேகையை துடைத்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளான்.