தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் மகளிர் ஆயம், மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை, மாவட்ட குடும்ப நலச் செயலகம் இணைந்து இளம் வயது திருணங்கள் மற்றும் இளம் வயது கருத்தரித்தல் விழிப்புணர்வு கருத்தரங்கை நடத்தின. கல்லூரி முதல்வர் ஜான்பீட்டர் தலைமை தாங்கினார். மருத்துவ கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன் முன்னிலை வகித்தார். கருத்தாளர்களாக, மகப்பேறுத்துறைத்
தலைவர் மருத்துவர் இராஜராஜேஸ்வரி , மகப்பேறு இணைப்பேராசிரியர் மருத்துவர் உதயா அருணா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் பிலாமினோ சாந்தினி, ஒருங்கிணைந்த சேவை மையம் குழந்தை வளர்ச்சி அலுவலர் பிரபா, கோடீஸ்வரன் கலந்து கொண்டு இளம் வயது திருமணங்கள் ஏற்படுத்தும் சிக்கலையும், அதனால் வரும் கருத்தரித்தலால் உடலுக்கு ஏற்படும் பின் விளைவுகளையும், பாதுகாப்பு முறைகள் பின்பற்றப்பட வேண்டியதையும் புள்ளிவிவரங்கள் தெரிவித்தனர்.
மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன், மாணவிகளுடன் கேள்வி பதில் நிகழ்ச்சியை நடத்தினார். இதில் பாதுகாப்பு மையங்களின் துணையினையும் பெண்களின் விழிப்புணர்வினையும், குருதி பற்றாக் குறையால் ஏற்படும் உபாதைகளையும் அரசு செயல்பாடுகள் பற்றியும் அறிவுறுத்தினார். கண்ணம்மாள், வீரமணி நன்றி கூறினர்.