தஞ்சாவூர் ஒன்றியம் கூடலூர் நந்தவனத் தோட்டம் வெண்ணாற்றின் கரையோரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், பாபநாசம் வட்டம் மண்ணியாறு தலைப்பில் காவிரி வடிநில கோட்டம் சார்பில் மணல் மூட்டைகள் தயார் நிலையில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளதையும், சாலையோரம் மழையின் போது மரங்களை அப்புறப்படுத்தும் கருவிகள் இருப்பில் உள்ளதையும் பார்வையிட்டார்.
பின்னர் பாபநாசம் வட்டம் வாழ்க்கை ஊராட்சியில் கொள்ளிடம் ஆற்றின் கரையை பார்வையிட்டு, முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். இதேபோல் ராஜபுரம் கிராமசாலை ரூ.71.90 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டார்.
உமையாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆய்வு செய்த மாவட்ட கண்காணிப்பு அலுவலர். மாணவர்களின் கல்வித் தரம் மற்றும் சமையல் கூடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து அணைக்கரை ஊராட்சியில் கொள்ளிடம் ஆற்றின் கரையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அணைக்கரையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களின் கல்வித் திறனையும், மழையின் போது பொதுமக்களின் பொதுமக்களை தங்க வைப்பதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்தும். கும்பகோணத்தில் ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவிகள் விடுதியினை நேரில் பார்வையிட்டு அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர்கள் இலக்கியா (தஞ்சாவூர்), பூர்ணிமா (கும்பகோணம்), மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் முத்துக்கிருஷ்ணன், செயற்பொறியாளர், நீர்வள ஆதாரத் துறை, வெண்ணாறு வடிநில கோட்டம், தஞ்சாவூர் மதனசுதாகரன், உதவி செயற்பொறியாளர்கள், காவிரி வடிநில கோட்டம், தஞ்சாவூர் யோகீஸ்வரன், சிவக்குமார் உதவி செயற்பொறியாளர், வெண்ணாறு வடிநில கோட்டம், தஞ்சாவூர் இரத்தினவேல், உதவி பொறியாளர், காவிரி வடிநில கோட்டம், தஞ்சாவூர், பூங்கொடி, ராஜ்குமார் மற்றும் அன்பு செல்வன். வட்டாட்சியர்கள் அருள்ராஜ் (தஞ்சாவூர்). மணிகண்டன் (பாபநாசம்). பாக்யராஜ் (திருவிடைமருதூர்) மற்றும் பலர் உடன் இருந்தனர்.