விவசாய கடனை ரத்து செய்ய வேண்டும் மாணவ மாணவிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வெற்று வாழை இலைகளை பரப்பி கலெக்டர் அலுவலக வளாகம் முன்பு தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் நூதன போராட்டம் நடந்தது.
மத்தியஅரசு கடந்த 10 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு உரத்தின் விலையை குறைக்கவில்லை. விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. மாணவ, மாணவிகளின் கல்வி கடனை தள்ளுபடி செய்யாது ஆகியவற்றை கண்டித்தும் விவசாயிகளும் நிலம் உள்ளது. ஆனால் உணவு இல்லை. சாப்பாடு இல்லாமல் இலை மட்டும் இருந்து என்ன பிரயோஜனம் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் வெற்று வாழை இலைகளை பரப்பி அதன் முன்பு அமர்ந்து நூதன போராட்டம் நடந்தது.
விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநிலத் துணைத் தலைவர் சுகுமாரன் தலைநகரித்தார் தமிழக விவசாய
சங்க மாவட்ட தலைவர் ஜெயபால் செயலாளர் சக்திவேல் மாவட்ட செயலாளர் சந்திரசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 35 ஆயிரம் பயிர் இன்சூரன்ஸ் மற்றும் நிவாரணம் ஏக்கருக்கு 35 ஆயிரம் வழங்க வேண்டும். மாணவர்களின் கல்வி கடனை ரத்து செய்ய வேண்டும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாய கடன் கட்ட முடியாத விவசாயிகளுக்கு தேசிய வங்கிகளின் ஜப்தி நடவடிக்கை, கோர்ட் நோட்டிஸ் அனுப்புவதை தடுத்து நிறுத்த வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதார கோரிக்கை நிறைவேற்ற வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.