தஞ்சாவூர் மாநகராட்சி கோ-ஆப்ரேட்டிவ் காலனியில் மாநகராட்சி சார்பில் ரூ,30 இலட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலைய கட்டட கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட உணவு தயரிக்கும் பணியையும் பார்வையிட்டார்.
தொடர்ந்து, முனிசிபல் காலனியில் மாநகராட்சி சார்பில் ரூ. 3 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி கட்டட கட்டுமானப் பணிகளையும், மருத்துவக் கல்லூரி சாலை 1ல் செயல்படும் பொது விநியோக திட்ட அங்காடியில் உணவுப் பொருட்களின் இருப்பு குறித்து மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாநகராட்சி செயற்பொறியாளர் சேர்மகனி, வட்டாட்சியர் அருள்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்