தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக அளித்தனர். அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், திருவோணம் ஊராட்சிக்கு உட்பட்ட 66 சங்கரனார் குடிக்காடு கிராமத்தை சேர்ந்த 10க்கும் அதிகமான பொதுமக்கள் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
மேற்கண்ட கிராமத்தில் நாங்கள் வசித்து வருகிறோம். பல ஆண்டுகளாக மக்களின் பயன்பாட்டில் இருந்து வந்த வள்ளிமடதோப்பு வடக்கு தெருவுக்கு வரும் தார் சாலையை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். தார்சாலை மண்ணை JCB இயந்தி;ரம் மூலம் வெட்டி டிராக்டர் மூலம் அவர் வீட்டுக்கு கொண்டு சென்றுவிட்டார்.
இந்த தார்சாலை வழியாக இங்கு வசித்து வரும் 10க்கும் அதிகமான குடும்பத்தினர் பல தலைமுறையாக சென்று வருகிறோம். எங்கள் குழந்தைகள் பள்ளிக்கு சென்று வருகிறார்கள் இந்த சாலை சுமார் 4 மீட்டர் அகலம் கொண்ட சாலையாகும். இந்த சாலையை அந்த தனி நபர் சுமார் பாதியளவு 2 மீட்டர் அளவுக்கு வெட்டி எடுத்து சென்றுவிட்டார். மேலும் இந்த தார்சாலை வழியாகத்தான் விவசாயிகள் தங்களின் நிலங்களுக்கு இடுபொருட்களை எடுத்துச் செல்ல வேண்டும். தற்போது சாலை ஆக்கிரமிப்பு உள்ளததால் விவசாயிகளும் அவதியடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து அந்த தனிநபரிம் சென்று கேட்டால் ஆபாசமான முறையில் திட்டி மிரட்டுகிறார். எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு சாலையில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.