தஞ்சை, அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் சுரேஷ் குமார் ( 49). சம்பவத்தன்று இவர் ரெயிலடியில் இருந்து நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இவரை ஒரு வாலிபர் வழிமறித்து நிறுத்தி ரூ.500 பணத்தைப் பறித்து தப்பி ஓட முயன்றார். அதிர்ச்சி அடைந்த சுரேஷ்குமார் பொதுமக்கள் உதவியுடன் அந்த வாலிபரை பிடித்து மேற்கு போலீஸ் ஸ்டேசனில் ஒப்படைத்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், பணம் பறித்தவர் திருத்துறைப்பூண்டி பகுதியை சேர்ந்த காளிதாஸ் (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து காளிதாசை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சையில் நடந்து சென்றவரிடம் பணம் பறிக்க முயற்சி…. வாலிபர் சிக்கினார்…
- by Authour
