தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அண்ணா சிலை அருகில் அமைந்துள்ள அன்பு பேக்கரியில் கேக் திருவிழா கண்காட்சி நடைபெற்றது. தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் ரோல்கேக், பிளம்கேக், பிளாக்பாரஸ்ட், பிரஸ்கிரீம்கேக் உட்பட 100க்கும் மேற்பட்ட வகை வகையான கேக்குகள், காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மேலும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும், வெவ்வேறு வகையான புதிய சுவையில் கேக்குகள் தயார் செய்யப்பட்டது. குறிப்பாக இந்த கேக்
திருவிழாவில், தமிழக சினிமா துறையின் முன்னணி நடிகர்களான அஜித் மற்றும் விஜய்யின் உருவங்கள் பொறிக்கப்பட்ட இரண்டு உருவங்களும் சேர்ந்து, மொத்தம் 120 கிலோ எடை, சுமார் 6 அடி உயரம் கொண்ட ஆள் உயரம் கொண்ட கேக்குகளும் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. இந்த கண்காட்சியை தமிழகத்தின் பல்வேறு பகுதியில் உள்ள பேக்கரி கூட்டமைப்பு மற்றும் ரோட்டரி சங்கம் நிர்வாகிகள், ஏராளமான விஜய் மற்றும் அஜித் ரசிகர்களும், பொதுமக்களும் கண்டு, கேக்குகளை உண்டு மகிழ்ந்தனர்.