தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள கபிஸ்தலம் நடுப்பண்ணை சதன்குமார் மூப்பனார் பிறந்த நாளை முன்னிட்டு ரத்ததான முகாம் அவரது பங்களாவில் நடைபெற்றது. தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை ரத்த வங்கியும், சரண்குமார் மூப்பனார் நண்பர்களும் இணைந்து நடத்திய இந்த முகாமில் பத்துக்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர். ரத்ததானம் செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. ராசா மிராசுதார் மருத்துவமனை மருத்துவர் காயத்ரி, புனிதா உள்ளிட்ட மருத்துவ குழுவினர், கபிஸ்தலம் கலைச்செல்வன், சபரி உட்பட நண்பர்கள் பலர் கலந்து கொண்டனர்.
