தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம். சாலியமங்களம் விவேகானந்தா சமூக கல்வி சங்க வளாகத்தில் பெண்களுக்கு இயற்கை முறையில் வேளாண்மை செய்வது குறித்த விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு களப் பணியாளர் மகாலெட்சுமி தலைமை வகித்தார். பரமேஸ்வரி முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் நெற்கதிர் மகளிர் குழு தலைவி சத்தியவதி இயற்கை விவசாயம் குறித்து விளக்கி பேசினார். இதில் ராராமுத்திரகோட்டை. இரும்புதலை. கம்பர்நத்தம். மருதங்குடி ஆகிய பகுதியை சேர்ந்த மகளிர் சுய உதவி குழுவினர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை களப் பணியாளர்கள் ராமலெட்சுமி, கௌரி ஆகியோர் செய்திருந்தனர்
பெண்களுக்கு இயற்கை முறையில் வேளாண்மை குறித்த விழிப்புணர்வு பயிற்சி….
- by Authour
