தஞ்சை அருகே மேலஉளூர் கடம்புறார் தெருவில் அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது. மிகவும் பழமையான இந்த கோவில் திருப்பணி செய்யப்பட்டு குடமுழுக்கு நடந்தது. தொடர்ந்து தினமும் அபிஷேகம் ஆராதனைகள் நடந்து வந்தது. மண்டலாபிஷேகம் நடந்தது.
இதையொட்டி புனித நீர் அடங்கிய கடம் மற்றும் கலசங்கள் வைத்து ஹோமம் செய்யப்பட்டது. பூர்ணாஹுதி முடிந்து கடங்கள் ஊர்வல மாக எடுத்து வரப்பட்டு அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற் றது. பின்னர் மகாதீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிப்பட்டனர். விழா ஏற்பாடுகளை எஸ். பி. ராமையன் மற்றும் கிராம மக்கள் செய்து இருந்தனர்.