பட்டியலின மாணவி மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத தி.மு.க. அரசை கண்டித்து தஞ்சாவூரில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சேகர் தலைமை வகித்தார். மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன், இணைச் செயலாளர் சாவித்திரிகோபால், துணை செயலாளர்கள் மாசிலாமணி, வெண்ணிலாபாலைரவி, பொருளாளர் அன்புச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர செயலாளர் சரவணன் வரவேற்றார். இதில் முன்னாள் அமைச்சர் ஜெயபால், அதிமுக அமைப்பு செயலாளர் காந்தி, கொள்கை பரப்பு துணை செயலாளர் துரை.திருஞானம், விவசாய பிரிவு துணை செயலாளர் சிங்.ஜெகதீசன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் பட்டியலின மாணவி மீது கொடூர தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத திமுக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.