இந்திய குழந்தைகள் நல மருத்துவர்கள் சங்கம் சார்பில் ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பை குறைக்கும் நோக்கிலும் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் தாய்மார்கள், குழந்தைகளுடன் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சி அம்மாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு டாக்டர் செல்வக் குமார் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற 50 குழந்தைகளுக்கு சோப்பு, கரண்டி, மூடிகள், கடலை மிட்டாய், கொசு விரட்டியான ஓடாமாஸ் அடங்கிய ஹீரோ கிட் பேக் வழங்கப் பட்டது. இதில் டாக்டர்கள் பழனிசாமி, ராஜ்மோகன், அஜந்தன், நீலாராணி மற்றும் பொது மக்கள் பங்கேற்றனர்.
