தஞ்சை சீனிவாசபுரம் கிரிரோடு பகுதியில் நேற்று மாலை மகளிர் கல்லூரி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் மாணவிகள் பயணம் செய்தனர். திடீரென மர்மநபர் யாரோ பஸ்சின் முன்பக்க கண்ணாடி மீது மது பாட்டிலை வீசினர். இதில் முன்பக்க கண்ணாடி நொறுங்கியது. பஸ்சில் இருந்த மாணவிகள் மிகுந்த அச்சத்துடன் சத்தம் போட்டனர். இது குறித்து மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் மாணவிகள் அனைவரும் வேறொரு பஸ்சில் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.