தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை பகுதிக்கு உட்பட்ட நல்லவன்னியன்குடிகாடு பகுதியை சேர்ந்தவர் மீனா வயது 51 இவரது கணவர் அன்பழகன். இவர் நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவர்களின் வீட்டை பூட்டை உடைத்து மீனா அணிந்திருந்த 11 கிராம் தாலி சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து தப்பி சென்றனர். அதேபோல் ராராமுத்திரை கோட்டையை பகுதியை சேர்ந்த சிங்காரம் மகன் குமரேசன் வயது 28. இவர் நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் ரூமில் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்து 6.5 கிராம் தங்க நகையை திருடி தப்பிச் சென்றனர். மேலும் தஞ்சை புதிய பேருந்து நிலையம் பகுதியை சேர்ந்தவர் கல்யாணி வயது 52. இவரது கணவர் இளங்கோவன்.
இளங்கோவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கத்திரி நாத்தம் பகுதியில் உள்ள அவரது தம்பி வீட்டில் தங்கி இருந்தார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் கல்யாணி அணிந்திருந்த மூன்று சவர நகையை பறித்து தப்பி சென்று விட்டார். இந்த நிலையில் கல்யாணி திருடன் என்று சத்தம் போட்டதை கேட்டு அக்கம் பக்கத்தினர் மர்ம நபர்களை பிடிக்க செல்லும்போது அவர்கள் தப்பிச் சென்றனர். இதை எடுத்து மீனா குமரேசன் கல்யாணி ஆகியோர் அம்மாபேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அந்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற அம்மாபேட்டை காவல் ஆய்வாளர் இளவரசன் சம்பவ இடத்தை பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் இந்த மூன்று திருட்டு சம்பவத்திற்கும் ஒரே நபர் ஈடுபட்டு உள்ளாரா இல்லையா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நாளில் மூன்று பேர் வீட்டில் திருட்டு சம்பவம் மறைகிறது பொதுமக்கள் மத்தியில் பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தியது. இதன் மதிப்பு மூன்று லட்சத்திற்கு மேல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.