தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் 26 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு, ரூ.26 லட்சம் மதிப்பீட்டில் மூன்று சக்கர மொபட்டுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இந்த மொபட்டுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு வருவாய் கோட்டாட்சியர் ஜெயஸ்ரீ தலைமை வகித்தார்.
பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் மொபட்டுகளை வழங்கினார். வட்டாட்சியர் தெய்வானை மற்றும் மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பயனாளிகள், பொதுமக்கள் கலந்து கலந்து கொண்டனர். தமிழகத்திலேயே சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இவ்வாறு அதிக அளவில் வழங்கப்படுவது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது.