வரும் 2023 – 24 ஆம் கல்வி ஆண்டுக்கான தஞ்சாவூர் மாவட்டத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வழங்குவதற்காக பாடப்புத்தகங்கள் தஞ்சாவூர் கொண்டு வரப்பட்டுள்ளன. பள்ளி திறக்கப்படும் முதல் நாளிலேயே மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத்திலிருந்து ஒவ்வொரு மாவட்டத்துக்கும் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.
இதன்படி தஞ்சாவூர் மாவட்டத்திற்கும் புத்தகங்கள் லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்த புத்தகங்கள் அரசு புத்தகக் கிடங்குகளுக்கு கொண்டுவந்து பாதுகாப்பாக இறக்கி வைக்கப்பட்டது. இதேபோல் பட்டுக்கோட்டையில் உள்ள கிடங்கிலும் புத்தகங்கள் பாதுகாப்பாக இறக்கி வைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. கல்வியாண்டு தொடக்கத்தில் பள்ளி திறக்கப்படும் அன்றே மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படும் என கல்வித்துறை உயர் அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.