Skip to content
Home » தஞ்சை அருகே 12வயது சிறுமியிடம் சில்மிஷம்.. வாலிபருக்கு தர்மஅடி… கைது..

தஞ்சை அருகே 12வயது சிறுமியிடம் சில்மிஷம்.. வாலிபருக்கு தர்மஅடி… கைது..

தஞ்சாவூர்: தஞ்சை அருகே மனநிலை பாதிக்கப்பட்ட 12 வயது சிறுமியிடம் முறைகேடாக நடக்க முயன்ற இளைஞரை பொதுமக்கள் வளைத்து பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

தஞ்சை அருகே ரெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த கோவிந்தராவ் என்பவரின் மகன் வெங்கட் ராவ் (48). இவரது 12 வயது மகள் மனநிலை பாதிக்கப்பட்டவர். கடந்த 31ம் தேதி அந்த மனநிலை பாதிக்கப்பட்ட சிறுமி களிமேடு நரிமேடு தெரு பகுதியில் நின்றிருந்தார்.

அப்போது அங்கு வந்த ஒரு இளைஞர் அந்த சிறுமிக்கு தின்பண்டங்கள் வாங்கி கொடுத்து அவரிடம் தவறான முறையில் நடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அவ்வழியே சென்ற பொதுமக்கள் இதை பார்த்து விட்டனர். உடன் அந்த இளைஞரை வளைத்து பிடித்து தர்ம அடி கொடுத்து சிறுமியை மீட்டனர். தொடர்ந்து சுந்த சிறுமியின் தந்தை வெங்கட்ராவுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து வெங்கட்ராவ் வல்லம் அனைத்து மகளிர் போலீசில் இது குறித்து புகார் செய்து அந்த இளைஞரை போலீசாரிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து போலீசார் அந்த இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டபோது அவர் பசுபதி கோயில் பகுதியை சேர்ந்த நடராஜன் என்பவரின் மகன் அருள்ராஜ் (38) என்பது தெரியவந்தது.

இதையடுத்து வல்லம் அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த அருள்ராஜ் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!