தஞ்சாவூர் அருகே நாஞ்சிக்கோட்டை சாலை கருணாவதி நகரில் சூப்பர் மார்க்கெட், மெடிக்கல்ஷாப், ஸ்டுடியோ, ஹார்டுவேர்ஸ் உள்ளிட்ட கடைகளில் கடந்த ….. நாளில் பூட்டை உடைத்து கடைகளில் ரூ.21 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் ஸ்டில் கேமரா ஆகியவற்றை இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் திருடிச் சென்றனர்.
அதே போல், விளார் சாலை வீரமாகாளிஅம்மன் கோயில் அருகே சூப்பர் மார்க்கெட் மற்றும் செல்போன் கடையிலும் பூட்டை உடைத்து அங்கிருந்த ரொக்கப்பணம் ரூ.1 லட்சத்தி 7 ஆயிரம் மற்றும் செல்போன் உதிரிபாகங்கள் ஆகியவற்றை இரண்டு இளைஞர்கள் திருடிச் சென்றனர்.
இரண்டு திருட்டு சம்பவங்களும் அதிகாலை நேரத்தில் நடைபெற்றதால், இது குறித்து தமிழ்ப் பல்கலைக் கழக போலீஸார் மற்றும் தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். அந்தந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து போலீஸார் விசாரித்த போது, இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் கோவை சாய்பாபா காலனி கருணாமூர்த்தி மகன் சந்தோஷ் (23), கரூர் மணவாடி பகுதியைச் சேர்ந்த ராமசாமி மகன் அஜய்(24) என்பது தெரியவந்தது.
தொடர்ந்து அவர்களை போலீஸார் தேடி வந்தபோது, புதுப்பட்டினம் அருகே கல்லணைக் கால்வாய் பாலம் பகுதியில் மறைந்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து தாலுகா இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றபோது, அவர்கள் போலீஸாரை கண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்ல முயன்றபோது கீழே விழுந்து காலில் முறிவு ஏற்பட்டது. தொடர்ந்து அவர்களை பிடித்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
