Skip to content
Home » தஞ்சையில் 108 ஆம்புலன்ஸ் டிரைவருக்கு ஆள் சேர்ப்பு முகாம்….

தஞ்சையில் 108 ஆம்புலன்ஸ் டிரைவருக்கு ஆள் சேர்ப்பு முகாம்….

நாகப்பட்டினம்,திருவாரூர் ,தஞ்சாவூர் ,மயிலாடுதுறை ஒருங்கிணைந்த 108 ஆம்புலன்ஸ் சேவை திட்ட மேலாளர் மோகன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது….  தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ்சில் பணிபுரிய டிரைவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் பணிக்கான ஆள் சேர்ப்பு முகாம் வரும் 25ம் தேதி சனிக்கிழமை, தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் உள்ள 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் நடைபெறுகிறது.

இதில், ஓட்டுநருக்கான பணியில் சேர, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், விண்ணப்பதாரருக்கு 24 வயதுக்கு மேலும் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். 162.5 சென்டி மீட்டர் குறையாமல் இருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் மற்றும் பேட்ஜ் வாகன உரிமம் எடுத்து குறைந்தபட்சம் ஓர் ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு பெற்றவர்களுக்கு மாத ஊதியமாக ரூபாய் 15,235 (மொத்த ஊதியம்) வழங்கப்படும். எழுத்து தேர்வு, தொழில்நுட்ப தேர்வு, மனிதவளத்துறை நேர்காணல், கண் பார்வை திறன் மற்றும் மருத்துவம் சம்பந்தப தேர்வு, சாலை விதிகளுக்கான தேர்வு முறையில் தேர்வு செய்யப்படும். அனைத்திலும் தேர்ச்சி பெற்றவர்கள் 10 நாட்களுக்கு பயிற்சி வகுப்புகள் வழங்கப்படும். பயிற்சி காலத்தில் தங்கும் வசதி செய்து தரப்படும்.

இதை போல மருத்துவ உதவியாளருக்கான தகுதிகள் பி.எஸ்.சி., நர்சிங், GNM, ANM , DMLT (பன்னிரண்டாம் வகுப்பிற்கு பிறகு இரண்டு ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்) அல்லது லைப் சயின்ஸ், BSc Zoology , Botany, Bio- Chemistry ,Micro biology ,Bio technology இதில் ஏதோ ஒரு பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். மாதம் ஊதியம் ரூபாய் 15,435 (மொத்த ஊதியம்) நேர்முகத் தேர்வு அன்று 19 வயதிற்கு மேலும் 30 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு, மருத்துவ நேர்முகம் உடற்கூறியல் முதலுதவி அடிப்படை செவிலியர் பணி, மனிதவளத்துறையின் நேர்முகத் தேர்வு ஆகிய முறையில் தேர்வு நடைபெறும். இத்தேர்வுகளில் தேர்வு செய்யப்பட்டவர்கள் 50 நாட்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் சார்ந்த நடைமுறை பயிற்சி அளிக்கப்படும் பயிற்சி காலத்தில் தங்கும் வசதி செய்து தரப்படும் மேலும் விவரங்களுக்கு 7397701807 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!