தங்கலான் படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், மக்கள் படத்தில் பாசிட்டிவாக 2 விஷயங்கள் மட்டும் தான் இருக்கிறது என்று கூறிவருகிறார்கள். அது என்னென்ன விஷயங்கள் என்பதை பற்றி இதில் பார்க்கலாம்.
1.விக்ரம் நடிப்பு
விக்ரம் பொறுத்தவரையில் தங்கலான் படம் மட்டுமின்றி, இதற்கு முன்னதாக அவர் நடித்த படங்கள் எல்லாமே அவருடைய நடிப்பை வெளிக்காட்டும் வகையில் கடினமான கதாபாத்திரமாக தான் இருக்கும். அப்படியான கதாபாத்திரங்களை தான் விக்ரம் தேர்வு செய்து நடித்து வருகிறார். அப்படி தான் தங்கலான் படத்திலும் நடித்து இருந்தார்.
படத்தினை பா.ரஞ்சித் இயக்கியதன் காரணமாக கதை மீதும் அவர் விக்ரமுடன் கூட்டணி அமைத்துள்ள காரணத்தால் இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் இருந்தது. ஆனால், படத்தின் திரைக்கதை சரியாக இல்லை என்பதால் படம் சற்று கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
படத்தை பார்த்த பலரும் கதை மற்றும் திரைக்கதையில் பா.ரஞ்சித் ஏமாற்றி விட்டதாக தெரிவித்து வருகிறார்கள். ஆனால், பெரும்பாலான மக்கள் கூறுவது என்னவென்றால் விக்ரம் நடிப்பு பற்றி தான். ஏனென்றால், அந்த அளவுக்கு இந்த படத்தில் தன்னை வருத்தி விக்ரம் நடித்து இருக்கிறார். படத்தில் பாசிட்டிவாக பேசப்படும் விஷயங்களில் விக்ரம் நடிப்பும் ஒன்றாக அமைந்துள்ளது.
2. ஜிவி பிரகாஷ்
தங்கலான் படத்தில் பாசிட்டிவாக பார்க்கப்படும் மற்றோரு விஷயம் என்னவென்றால் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசை என்று சொல்லாம். அந்த அளவுக்கு துல்லியமான பாடல்களையும், படத்திற்கு முக்கிய தூணாக பின்னணி இசையையும் ஜிவி பிரகாஷ் அமைத்து கொடுத்து இருக்கிறார்.
இதைப்போலவே, இதற்கு முன்னதாக ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு ஜிவி பிரகாஷ் சிறப்பான பின்னணி இசையையும், பாடல்களையும் வழங்கி இருந்தார். ஆனால், அந்த சமயம் படத்தை கொண்டாட மக்கள் தவறியதால் அவருடைய இசை பெரிய அளவில் பேசப்படவில்லை. பின் காலங்கள் கடந்த பிறகு அந்த படமும், அவருடைய இசையையும் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.
அந்த படத்திற்கு எந்த அளவுக்கு பாடல்கள், பின்னணி இசை கொடுத்து இருந்தாரோ அதே போலவே தங்கலான் படத்துக்கும் ஜிவி பிரகாஷ் கொடுத்து இருக்கிறார். ஆனால், படம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. படத்தின் பாசிட்டிவான விஷயங்களில் அவரின் பின்னணி இசையும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.