தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் காமராஜர் காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். பொதுமக்கள் சில்லறையாகவும் வியாபாரிகள் மொத்தமாகவும் விற்பனைக்காக வாங்கி செல்வது வழக்கம்.
இந்த நிலையில் காமராஜர் மார்க்கெட்டின் நுழைவாயிலில் கழிவு நீர் செல்லும் பாதையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் முழுவதும் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிக சிரமத்துடன் சென்று வருகின்றனர். கழிவறை சாலையில் தேங்கி நிற்பதால் அதிக அளவில் துர்நாற்றம் வீசியது. மேலும் இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி சார்பாக இந்த கழிவு நீர் சீராக செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடை வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.