தஞ்சாவூர் மாவட்டம் பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி, துணை தலைவர் முருகேசன் கலந்துகொண்டு 40 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.
இதில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கதிரவன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக உதவி தலைமை ஆசிரியர் முருகேசன் வரவேற்புரை ஆற்றினார். முடிவில் பொறுப்பாசிரியர் ஜெகதீசன் நன்றி கூறினார்.