திருச்சிக்கு வந்த புதுச்சேரி கவர்னர் தமிழிசை விமானநிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது… புதுச்சேரி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு புதுச்சேரி மக்களுக்கு நல்ல பல திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. எரிவாயு மானியம் வழங்கப்படுகிறது.
மத்திய அரசும் தனது பங்காக ₹200 வழங்குகிறது. பட்ஜெட்டை அறிவித்த புதுச்சேரி முதல்வர், அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தை போன்று புதுச்சேரியிலும் குடும்பத் தலைவிகளுக்கு
ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. பாரத பிரதமர் மோடி கூறியதைப் போல புதுச்சேரியை
பெஸ்ட் புதுச்சேரியாக கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளும் செய்யப்பட்டு வருகிறது. ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் தமிழக ஆளுநருக்கும் தமிழக அரசுக்குமான சட்டப் போராட்டம். அதில் நான் கருத்து சொல்ல விரும்பவில்லை என்றார்.
