Skip to content
Home » த.வெ.க.,மாநாட்டுக்கு செல்லும் தொண்டர்களுக்கு 8 கட்டளைகள்…

த.வெ.க.,மாநாட்டுக்கு செல்லும் தொண்டர்களுக்கு 8 கட்டளைகள்…

 

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் அக்டோபர் 27ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக காவல்துறையில் இருந்து அனுமதியும் பெறப்பட்டு விட்டது. இந்நிலையில் மாநாட்டுக்கு வருபவர்கள் எப்படி வரவேண்டும்? எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என தவெக தலைமை தொண்டர்களுக்கு 8 கட்டளைகளை பிறப்பித்துள்ளது.

இதன்படி

 

* பெண் போலீசாரிடம் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும்.

*யாரும் மது அருந்திவிட்டு வரக்கூடாது.

* சாலையில் எந்த வாகனங்களுக்கும் இடையூறு செய்யக்கூடாது.

*அதிகாரிகளிடம் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும்.

* கிணறு, ஆபத்தான பகுதிகள் இருப்பின் கவனமாக இருக்க வேண்டும்.

*இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் சாகசங்களில்(பைக் ஸ்டண்ட்) ஈடுபடவே கூடாது.

* மருத்துவக்குழு, தீயணைப்புத்துறையினருக்கு உரிய ஏற்பாடுகள் செய்து தரவேண்டும்.

*பேருந்து, வேன்களில் அனுமதிக்கப்பட்ட அளவில் மட்டுமே ஆட்களை ஏற்றி வரவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!