பிரதமர் நரேந்திர மோடியை அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை இன்று பாராளுமன்ற அலுவலகத்தில் சந்தித்து பேசினார். அப்போது குஜராத் சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றி பெற்றதற்கு அவர் வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் தமிழக அரசியல் நிலவரம் பற்றி அவர்கள் பேசியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுக பொதுக்குழு வழக்கு மீண்டும் 12ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் நிலையில் தம்பிதுரை, பிரதமரை சந்தித்தது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பரபரப்பாக பேசப்படுகிறது.