புதுக்கோட்டை மாவட்டம் திருமயம்அருகே உள்ள ராராபுரம் கிராமம் நடிகர் தம்பிராமையாவின்
சொந்த ஊர் ஆகும். இங்கு நடிகரும், தம்பி ராமையாவின் சம்பந்தியு மான அர்ஜுன்,மகன், மருமகள் ஆகியோரை தம்பி ராமையா அழைத்து வந்திருந்தார். அங்குள்ள திருவேட்டை அழகர்
கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு சென்றனர் . அங்கு தம்பி ராமையா பள்ளிக்குழந்தைகளுக்கு திருக்குறள் சொல்லி,குட்டி கதையுடன் விளக்கி உரையாடல் நிகழ்த்தினார்.
