வேலூர் அருகே ஓடும் ரயிலில் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கீழே தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் வயிற்றிலிருந்த 4 மாத சிசுவின் இதயத்துடிப்பு நின்றுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்.
கோவையில் இருந்து திருப்பதி செல்லும் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் கர்ப்பிணி பெண் ஒருவர் பயணம் செய்துள்ளார். வேலூர் அருகே ரயில் சென்றுகொண்டிருந்த போது அந்த ரயிலில் பயணம் செய்த மர்ம நபர்கள் சிலர் அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கத்தி கூச்சலிட்ட நிலையில், இதனால் தாங்கள் மாட்டிக்கொள்வோம் என பயந்த மர்ம நபர்கள் கர்ப்பிணி பெண் என்றும் பார்க்காமல் அந்த பெண்ணை ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளனர். இதனால் அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு கை, காலில் எழும்பு முறிவு ஏற்பட்ட நிலையில், படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஹேமராஜ் என்பவர் கைது கைது செய்யப்பட்டார். இந்நிலையில், கீழே தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் வயிற்றிலிருந்த 4 மாத சிசுவின் இதயத்துடிப்பு நின்றுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார். இறந்த சிசுவை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளனர். இதனால் விரைவில் அந்த சிசு வயிற்றில் இருந்து அகற்றப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.