7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் நடிகர் விஜய் நடிக்கும் புதிய படமான ‘தளபதி 67’ யை தயாரிக்கிறது. விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இந்த புதிய படத்தை இயக்குகிறார், விஜய் நடித்த கத்தி, மாஸ்டர் மற்றும் பீஸ்ட் ஆகிய படங்களுக்கு இசை அமைத்த அனிருத் ‘தளபதி 67’ படத்திற்கு இசை அமைக்கிறார். மேலும் தொழில்நுட்பக் குழுவினராக டிஓபி – மனோஜ் பரமஹம்சா, ஆக்ஷன் – அன்பரிவ், எடிட்டிங் – பிலோமின் ராஜ், கலை என். சதீஸ் குமார், நடனம் – தினேஷ், வசனம் எழுதியவர்கள் – லோகேஷ் கனகராஜ், ரத்ன குமார் & தீரஜ் வைத்தி, நிர்வாகத் தயாரிப்பாளர் – ராம்குமார் பாலசுப்ரமணியன் பயணியாற்றுகின்றனர்.